புதுச்சேரியில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 1000-ஐ நெருங்குகிறது


புதுச்சேரியில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 1000-ஐ நெருங்குகிறது
x
தினத்தந்தி 6 July 2020 3:00 AM IST (Updated: 6 July 2020 2:29 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் மேலும் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு 1000-ஐ நெருங்குகிறது.

புதுச்சேரி, 

புதுச்சேரியில் மேலும் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு 1000-ஐ நெருங்குகிறது.

புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

43 பேர் பாதிப்பு

புதுவையில் 442 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 பேரும், ஜிப்மரில் 3 பேரும், ஏனாம் மருத்துவமனையில் 10 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 15 ஆண்களும் 28 பெண்களும் அடங்குவர். அவர்களில் 11 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள், 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 21 பேர், மூன்று பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். அதேபோல் நேற்று ஒரே நாளில் மட்டும் சிகிச்சை முடிந்து 43 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

20,186 பேருக்கு பரிசோதனை

இதுவரை 20,186 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 365 பேருக்கு சோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. புதுவை மாநிலத்தை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பு 1000-ஐ நெருங்குகிறது.

தற்போது கொரோனாவுக்கு 484 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 448 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story