வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்ட பிறகு ஓட்டல்களை திறப்பது பற்றி முடிவு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்ட பிறகு ஓட்டல்களை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை,
வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்ட பிறகு ஓட்டல்களை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
கலந்துரையாடல்
மராட்டியத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பார்சல் வினியோகிக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ‘மிஷன் பிகின் அகெய்ன்' திட்டத்தின் கீழ் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஓட்டல்கள் திறக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று காணொலி காட்சி மூலம் ஓட்டல் மற்றும் உணவக சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார்.
அப்போது ஓட்டல், உணவகங்களை திறக்க மாநில அரசு அனுமதிக்க வேண்டும் என சங்க நிர்வாகிகள் கேட்டு கொண்டனர்.
விரைவில் முடிவு
இதையடுத்து அவர்களிடம் பேசிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, ‘‘ஓட்டல்கள் மற்றும் உணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் முடிவு செய்யப்பட வேண்டும். அது முடிந்தவுடன் ஓட்டல்களை திறப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். வழிகாட்டு நெறிமுறைகள், ஒழுங்குமுறைகள், சுய ஒழுங்குமுறை, வேலைக்கு தேவையான ஆட்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை மிகவும் முக்கியமாகும்’’ என்றார். இதேபோல கொரோனாவுக்கு எதிரான பணிகளில் ஓட்டல், தங்கும் விடுதிகள் அரசுக்கு உதவியாக இருந்ததாக அந்த துறையினரை சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்ய தாக்கரே பாராட்டி உள்ளார்.
Related Tags :
Next Story