தாராவியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை சயான் கிளையுடன் இணைக்க முடிவு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு

தாராவியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை சயான் கிளையுடன் இணைக்க முடிவு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 6 July 2020 3:30 AM IST (Updated: 6 July 2020 3:42 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையை சயான் கிளையுடன் இணைக்க முடிவு செய்திருப்பதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மும்பை,

தாராவியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையை சயான் கிளையுடன் இணைக்க முடிவு செய்திருப்பதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இணைக்க முடிவு

தாராவி, சயான்- பாந்திரா லிங்ரோட்டில் உள்ள கட்டிடத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை செயல்பட்டு வந்தது. இந்த கிளை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வங்கி மூடப்பட்டு இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதினர்.

இந்தநிலையில் ஆகஸ்ட் 10-ந் தேதி முதல் இந்தியன் ஓவர்சீஸ் தாராவி கிளை, சயான் கிளையோடு இணைக்கப்பட உள்ளது. இதுகுறித்த நோட்டீஸ் தாராவி கிளை முன் ஒட்டப்பட்டு இருந்ததை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

எதிர்ப்பு

மேலும் அவர்கள் தாராவி கிளையை, சயான் கிளையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘வங்கி சார்ந்த பணிக்காக தாராவியில் இருந்து சயான் செல்ல முடியாது. எனவே இந்த நடவடிக்கையை வங்கி மேல் அதிகாரிகள் நிறுத்த வேண்டும்’’ என்றார். தாராவி வங்கி கிளையை திறக்கவில்லை என்றால் வாடிக்கையாளர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story