சீதப்பாலில் மேலும் ஒருவருக்கு தொற்று தாயும், மகனும் கொரோனாவில் இருந்து மீண்டனர்
சீதப்பாலில் மேலும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் தாயும், மகனும் கொரோனாவில் இருந்து மீண்டனர்.
ஆரல்வாய்மொழி,
சீதப்பாலில் மேலும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் தாயும், மகனும் கொரோனாவில் இருந்து மீண்டனர்.
கொரோனா
சீதப்பாலில் முதன் முதலில் லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சீதப்பால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஒருவருக்கு தொற்று
இந்த நிலையில் டிரைவரின் தம்பியின் நெருங்கிய நண்பர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது. உடனே சுகாதார ஆய்வாளர்கள் அய்யா குட்டி, சுடலைமுத்து, செயல் அலுவலர் யோகஸ்ரீ, கிராம நிர்வாக அலுவலர் கல்யாணி ஆகியோர் அங்கு வந்து தொற்று பாதிக்கபட்டவரை அம்புலன்சில் ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் உள்ள அவருடைய பெற்றோருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதோடு சீதப் பாலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே முதல் முதலில் தொற்று ஏற்பட்ட லாரி டிரைவரும், அவருடைய தாயாரும் குணமடைந்து வீடு திரும்பினர். தாழக்குடி செயல் அலுவலர் டிரைவர் வீட்டுக்கு சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.
Related Tags :
Next Story