நாகர்கோவில் வட்டக்கரையில் உயர் அழுத்த மின்சாரத்தால் 11 டி.வி.க்கள் சேதம் குளிர்சாதன பெட்டியும் தீயில் கருகியது
உயர் அழுத்த மின்சாரத்தால் நாகர்கோவில் வட்டக்கரை பகுதியில் 11 வீடுகளில் டி.வி.க்கள் திடீரென பழுதானது.
நாகர்கோவில்,
உயர் அழுத்த மின்சாரத்தால் நாகர்கோவில் வட்டக்கரை பகுதியில் 11 வீடுகளில் டி.வி.க்கள் திடீரென பழுதானது. மேலும் குளிர்சாதன பெட்டி தீயில் கருகியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டி.வி.க்கள் சேதம்
நாகர்கோவில் வட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி. இவரது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதே சமயத்தில் துணி துவைக்கும் எந்திரத்திலும் தீப்பற்றியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆன்டனி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தார்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த மேலும் சில பொருட்களும் எரிந்து நாசமானதாக தெரிகிறது. இதே போல அப்பகுதியில் உள்ள 11 வீடுகளில் இருந்த டி.வி.க்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களும் பழுதானது. திடீரென உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால் டி.வி.க்கள், மின்சாதனங்கள் சேதமடைந்ததாக தெரிகிறது.
நஷ்டஈடு
இதுபற்றி “அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, எங்கள் பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென வந்த உயர் அழுத்த மின்சாரத்தால் டி.வி., குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்களும் பழுதாகின. எனவே எங்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும்“ என்றனர்.
Related Tags :
Next Story