தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 72 பேருக்கு தொற்று உறுதி


தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 72 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 6 July 2020 6:35 AM IST (Updated: 6 July 2020 6:35 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தேனி,

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் பலருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 985 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் ஆயுதப்படை பெண் போலீஸ், 2 வயது பெண் குழந்தை, 14 வயது சிறுவன், சிறுவனின் தாய் உள்பட 13 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் என்.ஆர்.டி. நகர், கருவேல்நாயக்கன்பட்டி, அல்லிநகரம், பழைய டி.வி.எஸ். சாலை, மணிநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். அதுபோல், தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் 2 பேரும், வீரபாண்டி, அரண்மனைப்புதூர், மாரியம்மன்கோவில்பட்டி, தர்மாபுரி ஆகிய ஊர்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,057 ஆக அதிகரிப்பு

சின்னமனூரில் 19 வயது இளம்பெண், 63 வயது முதியவர் உள்பட 3 பேருக்கும், 3 வயது சிறுவன், கம்பத்தில் 8 வயது சிறுவன், 12 வயது சிறுமி, 79 வயது முதியவர் உள்பட 15 பேருக்கும், காமயகவுண்டன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கூடலூர் ஆகிய ஊர்களில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

போடியில் 2 சிறுவர்கள், 4 பெண்கள் உள்பட 12 பேரும், உத்தமபாளையத்தில் அ.தி.மு.க. நிர்வாகியின் மனைவி உள்பட 2 பேரும், தேவாரத்தில் 54 வயது பெண்ணும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு, பிச்சம்பட்டி, கோவில்பட்டி, சேடப்பட்டி மற்றும் வருசநாடு பகுதிகளில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

பெரியகுளத்தில் நகராட்சி தூய்மை பணியாளர், அரசு போக்குவரத்து கழக ஊழியரின் 2 மகள்கள், 9, 11 வயது சிறுவர்கள் உள்பட 11 பேருக் கும், எ.புதுப்பட்டியில் 52 வயது ஆணுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 72 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 57 ஆக அதிகரித்து உள்ளது.

பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 22 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 368 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

Next Story