சாத்தான்குளம் சம்பவம்: மதுரை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பட தடை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


சாத்தான்குளம் சம்பவம்: மதுரை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பட தடை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 July 2020 7:19 AM IST (Updated: 6 July 2020 7:19 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பட தடைவிதித்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை, 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தையும், மகனும் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனைத்தொடர்ந்து பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இதைதொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடைவிதிக்கப்பட்டது. இந்தநிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் தலா 2 பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் வேலை பார்த்து வருகின்றனர். குற்ற வழக்குகள் அதிகம் பதியப்படும் போலீஸ் நிலையங்களில் 2-க்கும் மேற்பட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பணியாற்றி வருகின்றனர்.

தற்காலிக தடை

இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் மறு உத்தரவு வரும் வரை இதனை அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களும் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Next Story