முழு ஊரடங்கை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம்


முழு ஊரடங்கை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 6 July 2020 8:07 AM IST (Updated: 6 July 2020 8:07 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கை கடைபிடிக்காமல் வாகனத்தில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

பனைக்குளம்,

முழு ஊரடங்கை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் மண்டபம், உச்சிப்புளி, கேணிக்கரை, தேவிபட்டினம் ஆகிய போலீஸ் சரக பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தேவிபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் கடற்கரை பகுதி முழுவதும் மீனவர்களை சந்தித்து கடலுக்கு செல்லக்கூடாது என உத்தரவிட்டிருந்தார். மேலும் தேவிபட்டினம், சித்தார்கோட்டை, அம்மாரி, அத்தியூத்து, தேர்போகி, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தகர்களை சந்தித்து முழு ஊரடங்கை கடைபிடிக்கும்படியும், அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதன்படி தேவிபட்டினம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதி முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதேபோல பாரதிநகர் முதல் உச்சிப்புளி, மண்டபம் ஆகிய பகுதிகளிலும் கிராமப்பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் தலைமையில் போலீசார் புதுமடம், உச்சிப்புளி, தாமரைக்குளம், ரெட்டையூரணி, நாகாச்சி, பெருங்குளம், புதுநகரம், என்மனங்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கை கடைபிடிக்காமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

Next Story