திருச்சி மாவட்டத்தில் புதிதாக 86 பேருக்கு தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது
திருச்சி மாவட்டத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 972 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 514 பேர் மாநகராட்சி பகுதியிலும், 453 பேர் புறநகர் பகுதியிலும் உள்ளனர். 5 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்.
புதிதாக பாதிக்கப்பட்ட 86 பேரில், 46 பேர் திருச்சி மாநகராட்சி பகுதியையும், 40 பேர் புறநகர் பகுதிகளையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். உறையூர் வாத்துக்கார தெருவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர வயலூர் ரோடு பகுதியில் 3, வண்ணாரப்பேட்டையில் 2 பேர், சீனிவாச நகரில் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் வார்டு எண் 57-ஐ சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
வார்டு வாரியாக...
இதுதவிர, வார்டு-50 தென்னூர், வார்டு- 41 கிராப்பட்டி, வார்டு-40 சோழன் நகர், வார்டு-60 லிங்கம் நகர், வார்டு-29 கீழ அம்பிகாபுரம், வார்டு- 62 நாகப்பசாமி தெரு, வார்டு-20 பென்சனர் தெரு, வார்டு-26 காஜாபேட்டை, வார்டு-14 அலங்கநாதபுரம், வார்டு-24 கல்லுக்கார தெரு, வார்டு-27 கோவிந்தகோனார் தெரு, வார்டு-28 செல்லையா தெரு, வார்டு-23 செங்குளம் காலனி, வார்டு- 61 பிலோமினாள் புரம், வார்டு-9 மேல சிந்தாமணி, விக்னேஷ் கார்டன், வார்டு-16 வெள்ளை வெற்றிலைக்கார தெரு, வார்டு-4 ராபி நகர், வார்டு-8 ஜான் தோப்பு, வார்டு-18 வளையல்கார தெரு, வார்டு-36 ராஜா தெரு, சகாயமாதா கோவில் தெரு, வார்டு-30 மேலகல்கண்டார் கோட்டை, தங்கேஸ்வரி நகர், வார்டு-42 காஜாமலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வார்டு-47 மார்சிங்பேட்டை, வார்டு-63 கோகுல் நகர், வார்டு-38 மகாலட்சுமி நகரை சேர்ந்தவர்கள்.
புறநகர் பகுதிகள்
புறநகர் பகுதிகளை பொறுத்தவரை முசிறி பகுதியில் ஆமூர், மண்பறை, புலிவலம், பி.மணியம்பட்டி, சேந்தபட்டி, நெய்வேலி, கோட்டாத்தூர், அய்யம்பாளையம், மண்ணச்சநல்லூர் பகுதியில் சுனைபுகநல்லூர், அழகிய மணவாளம், கரியமாணிக்கம், திருப்பைஞ்சீலி, வாசன் நகர், நொச்சியம், அந்தநல்லூர் பகுதியில் இனாம்புலியூர், குழுமணி, சிறுகமணி, பெட்டவாத்தலை, மணிகண்டம் பகுதியில் அல்லித்துறை, சோமரசம்பேட்டை, தீரன் நகர், மணப்பாறை பகுதியில் புத்தாநத்தம், தர்மலிங்கம் தெரு, மருங்காபுரி பகுதியில் கல்லுப்பட்டி, வையம்பட்டி பகுதியில் நடுப்பட்டி, துறையூர் பகுதியில் கிளியனூர் பட்டி, லால்குடி பகுதியில் மணக்கரை, சீனிவாசபுரம், மகிழம்பாடி, பெருவளநல்லூர் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
559 பேர் ‘டிஸ்சார்ஜ்’
திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 25 பேரும், காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருந்து 13 பேரும் நேற்று பூரண குணம் அடைந்து அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 559 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story