மருவத்தூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மருவத்தூர் பகுதியில் இன்று மின்வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்,
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் நகர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பேரளி துணை மின் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, அசூர், சித்தளி, பீல்வாடி, குரும்பாபாளையம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், வாலிகண்டபுரம், செங்குணம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story