ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட்கள் பெற இன்று முதல் டோக்கன் வழங்கப்படும் கலெக்டர் தகவல்


ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட்கள் பெற  இன்று முதல் டோக்கன் வழங்கப்படும்  கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 July 2020 11:32 AM IST (Updated: 6 July 2020 11:32 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட்கள் பெற இன்று(திங்கட்கிழமை) முதல் டோக்கன் வழங்கப்படும் என்று கலெக்டர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்,


நாகை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நடப்பாண்டு ஏப்ரல், மே மற்றும்் ஜூன் ஆகிய மாதங்களுக்கு ரேஷன்கடைகளின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜூலை மாதத்திற்குரிய விலையில்லா பொருட்கள் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 10-ந்தேதி முதல் வழங்கப்படும். அதற்கான டோக்கன் இன்று(திங்கட்கிழமை) முதல் 9 வரை 4 நாட்கள் வழங்கப்படும்.

ஜூலை மாதத்திற்கான விலையில்லா பொருட்கள் குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக பொருட்கள் வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்கள் அடங்கிய டோக்கன்களை 4 நாட்கள் வீடுகள் தோறும் சென்று ரேஷன் கடை பணியாளர்கள் வழங்குவார்கள். மேலும் அட்டை தாரர்களுக்கு டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்.

முக கவசம்

ரேஷன் கடைகளுக்கு 10-ந்தேதியன்று 2-வது வெள்ளிக்கிழமை வாராந்திர விடுமுறை தினமாகும். ஆனால் அன்றைய தினம் ரேஷன் கடைகளுக்கு பணி நாளாகவும், அதற்கு ஈடான விடுமுறை பின்னர் அறிவிக்கப்படும். மேலும் 5-ந்தேதி மற்றும் 12-ந்தேதியன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளதால் அன்றைய தினம் ரேஷன் கடைகள் இயங்காது. எனவே பொதுமக்களுக்கு 10-ந்தேதி முதல் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை பெற்று கொள்ள வேண்டும். விற்பனையாளர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் நபர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story