உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவில் இருந்து நம்மை நாமே பாதுகாக்க வேண்டும் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் சொல்கிறார்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவில் இருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவில் இருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் தெரிவித்துள்ளார்.
போலீஸ் கமிஷனர் பேட்டி
பெங்களூருவில் போலீசாருக்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனாவுக்கு 5 போலீசார் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், போலீசாரை கொரோனாவில் இருந்து பாதுகாக்க, அவர்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை நேற்று காலையில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ், போலீசாருக்கு வழங்கினார்.
பின்னா போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்த 33 மணிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. ஊரடங்கின் போது மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தனர். ஊரடங்கின் போது பெங்களூருவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்க வேண்டும் என்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை.
நம்மை நாமே பாதுகாக்க வேண்டும்
கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. முழு ஊரடங்கின் போது போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்திருந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். போலீசாருக்கு கொரோனா பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. .
போலீசாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, அவர்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்பட்டு உள்ளன. நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொண்டால் கொரோனாவில் இருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ள முடியும்.
இவ்வாறு பாஸ்கர்ராவ் கூறினார்.
Related Tags :
Next Story