கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு


கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 7 July 2020 4:30 AM IST (Updated: 7 July 2020 4:08 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்

ஈரோடு, 

கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

சோதனைச்சாவடி

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் எனவும் அரசு அறிவித்து உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியிலும் போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தினமும் 1,000-க்கும் மேற்பட்டோர் பல்வேறு காரணங்களுக்காக ஈரோட்டுக்கு வந்து செல்கின்றனர். அப்போது இ-பாஸ் இல்லாமல் வாகனங்களில் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

கிருமிநாசினி தெளிப்பு

மேலும் இ-பாஸ் இல்லாமல் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு நடந்து வரும் கூலித்தொழிலாளர்களின் பெயர் மற்றும் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். இதற்காக கூலித்தொழிலாளர்கள் நேற்று நீண்ட வரிசையில் நின்று தங்களது விவரங்களை தெரிவித்துவிட்டு ஈரோட்டுக்குள் வந்தனர். சுகாதாரத்துறையினர் அங்கு முகாம் அமைத்து கொரோனா பரிசோதனையும் செய்து வருகிறார்கள். கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி வழியாக வரும் வாகனங்களுக்கு ஈரோடு மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கிருமிநாசினியும் தெளித்து வருகிறார்கள்.

Next Story