கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்ட கொரோனா கண்காணிப்பு மையத்தில் கலெக்டர் ஆய்வு
கோவை கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்ட கொரோனா கண்காணிப்பு மையத்தில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆய்வு நடத்தினார்.
கோவை,
கோவையில் அறிகுறி இன்றி கொரோனா உறுதியானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொடிசியா வளாகத்தில் புதிதாக கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த மையத்திற்கு மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேற்று சென்று ஆய்வு நடத்தினார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா அறிகுறியில்லாத நிலையில் தொற்று உள்ளவர்களுக்கு என தனியாக சிகிச்சை அளித்திட ஏதுவாக கோவை கொடிசியா வளாக அரங்கில் 286 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கழிப்பிடம், படுக்கை வசதிகள், அடிப்படை வசதிகள், சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான உணவு போன்ற அனைத்தும் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை ஆகிய துறைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வையில் இந்த மையம் செயல்படும். இதில் 24 மணி நேரமும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராம துரைமுருகன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ரமேஷ்குமார் மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story