நீலகிரி மாவட்டத்தில் ராணுவ அதிகாரி உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிப்பு 150 ஆக உயர்வு


நீலகிரி மாவட்டத்தில்   ராணுவ அதிகாரி உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி   பாதிப்பு 150 ஆக உயர்வு
x
தினத்தந்தி 7 July 2020 4:59 AM IST (Updated: 7 July 2020 4:59 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் ராணுவ அதிகாரி உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு 150 ஆக உயர்ந்து உள்ளது.

ஊட்டி, 

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 124 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது ஊட்டி அருகே தனியார் தொழிற்சாலையில் கொரோனா பாதித்த அலுவலருடன் தொடர்பில் இருந்த எல்லநள்ளியை சேர்ந்த 39 வயது ஆண், 35 வயது பெண், 40 வயது பெண், ஜெகதளா பேரூராட்சி காரக்கொரையை சேர்ந்த 56 வயது பெண், காட்டேரியை சேர்ந்த 50 வயது ஆண், ஊட்டி நகராட்சி விஜயா பேலஸ் பகுதியை சேர்ந்த 29 வயது வாலிபர், பசுவையா நகரை சேர்ந்த 50 வயது ஆண், பாம்பேகேசிலை சேர்ந்த 33 வயது ஆண், வெலிங்டன் ஜெயந்தி நகரை சேர்ந்த 48 வயது ஆண், 76 வயது முதியவர், 30 வயது ஆண், கேத்தி பேரூராட்சி ஆர்.கே.எஸ். மண்டியை சேர்ந்த 70 வயது மூதாட்டி, 15 வயது சிறுவன், உல்லாடா பகுதியை சேர்ந்த 48 வயது ஆண், 37 வயது ஆண், கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியை சேர்ந்த 28 வயது ஆண், மாலிஸ் லைன் பகுதியை சேர்ந்த 43 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.

பாதிப்பு உயர்வு

மேலும் குன்னூரில் உள்ள ஓட்டுப்பட்டரை பகுதியை சேர்ந்த 42 வயது ராணுவ அதிகாரி, ஆந்திர மாநிலத்தில் உள்ள ராணுவ மையத்துக்கு சென்று வந்தார். அவரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில், தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தவிர சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வெலிங்டன் எம்.ஆர்.சி. பகுதிக்கு வந்த 48 வயது ஆண், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஊட்டி நகராட்சி எஸ்.பி.ஐ. லைன் பகுதிக்கு வந்த 45 வயது பெண், 49 வயது ஆண், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து முக்கிமலை கிராமத்துக்கு வந்த 38 வயது ஆண், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஊட்டி பெர்ன்ஹில் பகுதிக்கு வந்த 33 வயது ஆண், மதுரை மாவட்டத்தில் இருந்து கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதிக்கு வந்த 25 வயது இளம்பெண், உல்லாடா பகுதிக்கு வந்த 17 வயது சிறுவன் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கூடலூர் புரமண வயல் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன், துபாயில் இருந்து தொற்று பாதித்து வந்த ஒருவருடன் தொடர்பு இருந்ததால், அவனுக்கும் பாதிப்பு உறுதியானது. இதனால் நீலகிரியில் பாதிப்பு 150 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 59 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 91 பேரில் 71 பேர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையிலும், 20 பேர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story