வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் டீ, சலூன் கடைகள் திறக்க அனுமதி கலெக்டர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் டீ, சலூன் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் டீ, சலூன் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டீக்கடைகள் திறக்க அனுமதி
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மளிகை, காய்கறி உள்பட பல்வேறு கடைகள் திறப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடைகள் திறப்பது தொடர்பான கட்டிப்பாட்டில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் டீக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது இன்று முதல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் டீக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. டீக்கடைகள் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கலாம். பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்.
6 நாட்கள்
காய்கறி, மளிகைக்கடைகள் ஞாயிற்றுக்கிழமையை தவிர மற்ற 6 நாட்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையும், வணிக வளாகங்களை தவிர ஷோரும்கள் மற்றும் நகை, துணிக்கடைகள் ஞாயிற்றுக்கிழமையை தவிர தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையும் இயங்கலாம். இந்த கடைகளில் குளிர்சாதன எந்திரங்களை பயன்படுத்த கூடாது.
சலூன்கடைகள், அழகுநிலையங்கள், ஸ்பாக்கள் வருகிற 31-ந் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது சலூன்கடைகள் மட்டும் ஞாயிற்றுக்கிழமையை தவிர மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அழகுநிலையங்கள், ஸ்பாக்கள் வருகிற 31-ந் தேதி வரை மூடியிருக்க வேண்டும். இறைச்சி, மீன் கடைகள் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் மருந்து கடைகளை தவிர மற்ற கடைகளை திறக்க அனுமதி கிடையாது.
முகக்கவசம் கட்டாயம்
மேலும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, லாங்குபஜார் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கட்டுபாடுகள் நீடிக்கிறது.
கொரோனா தொற்று மாவட்டத்தில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 3 வாரங்களுக்கு ஒருமுறை 5 நாட்கள் தொடர்ந்து கண்டிப்பாக நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ளவர்கள் கபசுர குடிநீர் அருந்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story