காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வருகிற 10-ந்தேதி வினியோகம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வருகிற 10-ந்தேதி வினியோகம் செய்யப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வருகிற 10ந் தேதியிலிருந்து வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரையில் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு தோறும் டோக்கன்கள் வழங்கப்படும். கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் வரிசையில் நின்று பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story