கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை தாமதமின்றி தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுபோல் வீடு இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் புரட்சிரெட் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆண்டிப்பட்டி ஒன்றியம் அனுப்பப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேக்கிழார்பட்டி, தெப்பம்பட்டி, ஆவாரம்பட்டி, பாலக்கோம்பை ஆகிய கிராமங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு வழங்கிய இலவச வீட்டுமனைப்பட்டாவில் வீடு கட்டிக் கொடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் சிவா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story