ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் இரவில் திரண்ட 30 பேர் வனத்துறையினர் விசாரணை
ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் இரவு நேரத்தில் 30 பேர் திரண்டனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலை உச்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு அதிகமான விளக்குகள் எரிந்தன. மலை பகுதியில் திடீரென விளக்குகள் எரிந்ததால் அதிர்ச்சி அடைந்த சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் முதலியார் ஊத்து பங்களாவில் கேமரா பொருத்துவதற்கு சென்ற வனத்துறையினருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினர் விசாரணை
பின்னர் மலை உச்சியில் விளக்கு எரிந்து கொண்டு இருந்த ராக்காச்சி அம்மன் கோவில் பகுதிக்கு வனத்துறையினர் சென்றனர். அப்போது அங்கு இருந்த 30 பேர் வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்து நகர தொடங்கி விட்டனர்.
இவர்கள் யார்? எதற்காக இங்கு வந்தார்கள்? வருவதற்கான அனுமதி பெற்று இருந்தார்களா? கஞ்சா பயிரிடும் கும்பலா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் இரவு நேரத்தில் 30 பேர் திரண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story