திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்த நபருக்கு கொரோனா உறுதியானதால் பரபரப்பு


திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்த நபருக்கு கொரோனா உறுதியானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 July 2020 11:58 AM IST (Updated: 7 July 2020 11:58 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருவாரூர், 

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தின் அருகே கடந்த 3-ந் தேதி 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இறந்து கிடந்த நபருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பதை அறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இறந்தவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர், நாகை மாவட்டம் திருப்பயத்தாங்குடியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

அடக்கம் செய்ய நடவடிக்கை

இதைத்தொடர்ந்து நாகூர் போலீசார் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் மூலமாக இறந்தவர் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிராம நிர்வாக அதிகாரிக்கு கொரோனா

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 539 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று திருவாரூர் ஆயுதப்படை போலீசார் ஒருவர், வடபாதிமங்கலம் பகுதியை சேர்ந்த 2 மாத கைக்குழந்தை, கூத்தாநல்லூரை சேர்ந்த 27 வயது கிராம நிர்வாக அதிகாரி, வேளுக்குடியை சேர்ந்த 34 வயது கர்ப்பிணி, பொதக்குடியை சேர்ந்த 39 வயது ஆட்டோ டிரைவர் ஆகியோர் உள்பட 14 பேருக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 553 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று வரை 355் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 198 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story