வெவ்வேறு கொலை வழக்குகளில் சிக்கிய சகோதரர்கள் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது


வெவ்வேறு கொலை வழக்குகளில் சிக்கிய   சகோதரர்கள் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 8 July 2020 5:22 AM IST (Updated: 8 July 2020 5:22 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு கொலை வழக்குகளில் சிக்கிய சகோதரர்கள் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர், கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த டைசன் வினோ (வயது 31), ஜான்சன் வினோ (34), மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஆரோக்கிய தனிஸ்லாஸ் என்ற வினோத் (26) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல் திண்டுக்கல் அருகேயுள்ள நல்லாம்பட்டியை சேர்ந்த சங்கர் என்பவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (29) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரும் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே மேற்கண்ட கொலை வழக்குகளிலும் கைதான 4 பேரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமிக்கு, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில், திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருந்த டைசன் வினோ, ஜான்சன் வினோ, ஆரோக்கிய தனிஸ்லாஸ் என்ற வினோத், வெங்கடேஷ் ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அந்த 4 பேரும், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story