திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 217 பேருக்கு கொரோனா தொற்று

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 217 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரித் தெருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டரின் குடும்பத்தை சேர்ந்த மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்த பெண்ணுக்கும், சிகிச்சை பெற்ற குமாரராஜுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த 3 பேருக்கும், சூரராஜுப்பட்டை கிராமத்தை சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் பள்ளிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 5 ஊழியர்கள், அத்திமாஞ்சேரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 30 வயது மதிக்கத்தக்க போலீஸ்காரருக்கும், எம்.கே.பி. நகரில் வசித்து வரும் 22 வயது வாலிபருக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
சோழவரம் ஒன்றியம், ஆரணியில் வசித்து வரும் கும்மிடிப்பூண்டியில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வரும் 50 வயது மதிக்கத்தக்கவருக்கும், அவரது 46 வயது மனைவி, 16 வயது மற்றும் 14 வயது மகன்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களுடன் சேர்த்து திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 217 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,205 ஆக உயர்ந்தது. இதில் 1,744 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,356 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்தது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் 87 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,942 ஆக உயர்ந்தது. இவர்களில் 3,954 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த நிலையில் 76 வயது, 72 வயது, 61 வயதுடைய மூதாட்டிகள், 73 வயது முதியவர், 52 வயது ஆண், 39 வயது பெண், 37 வயது ஆண், 25 வயது இளம்பெண் ஆகிய 8 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்தது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,836 ஆக உள்ளது. இவர்களில் 1,137 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை கொரொனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக உள்ளது.

Related Tags :
Next Story