கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் அனுமதி: குணமாகி வீடு திரும்பிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆரத்தி எடுத்து தொண்டர்கள் வரவேற்பு
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பூந்தமல்லி,
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 26 நாட்களாக சிகிச்சையில் இருந்த அவர், குணம் அடைந்து போரூர் மதனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று திரும்பினார். அப்போது அவரது குடும்பத்தினரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உள்ளிட்டோரும் ஆரத்தி எடுத்தும், பூச்செண்டு கொடுத்தும் வரவேற்றனர். அவரது மனைவி, மகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர்களும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமாகி ஏற்கனவே வீடு திரும்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story