உர விற்பனை நிலையங்களில் டிஜிட்டல் முறையில் விவசாயிகளிடம் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும் வேளாண்மை இணை இயக்குனர் வேண்டுகோள்
உர விற்பனை நிலையங்களில் டிஜிட்டல் முறையில் விவசாயிகளிடம் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உர விற்பனையின் போது விவசாயிகளிடம் பணம் பெறாமல் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையை பின்பற்ற வேண்டும் என்று மத்திய உர அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட சுற்றறிக்கையின்படி உரிமம் பெற்ற அனைத்து உர விற்பனையாளர்களும், மானிய விலையிலான உரத்தை விற்பனை செய்யும் போது விவசாயிகளிடம் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டும். அதன்படி யூ.பி.ஐ.க்யூ.ஆர். கோடு ஸ்டிக்கரை தங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் பெற்று தங்களின் உர விற்பனை மையங்களில் வருகிற 15-ந்தேதிற்குள் ஒட்ட வேண்டும்.
நடவடிக்கை
எனவே அனைத்து உர விற்பனையாளர்களும் உடன் யூ.பி.ஐ.க்யூ.ஆர். கோட்டினை வங்கிகளில் பெற்று இந்த பணியினை உடன் முடிக்க வேண்டும். மேலும் உரம் விற்பனையை பி.ஓ.எஸ். எந்திரம் மூலம் மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story