பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம்
திருச்சியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, ஆட்டோவை கயிறு கட்டி இழுக்கும் நூதன போராட்டம் நடந்தது.
திருச்சி,
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மண்டல வர்த்தக பிரிவு அலுவலகம் முன்பு நேற்று ஆட்டோவை கயிறு கட்டி இழுக்கும் நூதன போராட்டம் நடந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த கண்டன போராட்டத்திற்கு, நிர்வாகி கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். மாநகர தலைவர் வின்சென்ட் ஜெயக்குமார், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாவட்ட தலைவர் சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சாமானிய மக்கள் கட்சி, ரெட் பிளாக் கட்சி, தமிழ்தேச மக்கள் முன்னணி, மக்கள் உரிமை கூட்டணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story