இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்க வீடு, வீடாக டோக்கன் வினியோகம்


இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்க வீடு, வீடாக டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 8 July 2020 11:56 AM IST (Updated: 8 July 2020 11:56 AM IST)
t-max-icont-min-icon

இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்க வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கரூர், 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அடுத்தடுத்து ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டது. வைரஸ் இன்னும் கட்டுக்குள் வராததால் இம்மாதம் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஏழை-எளிய மக்களின் துயரை துடைக்கும் பொருட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இம்மாதத்துக்கான அரிசியையும் விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

அவ்வாறு வழங்கப்படும்போது கூட்டநெரிசலை தவிர்க்கும்பொருட்டு ரேஷன் அட்டைதாரர்கள் ஒரு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த டோக்கனில் உள்ள தேதியில், குறிப்பிட்டுள்ள நேரத்தில் ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்கள் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

டோக்கன்

இந்தநிலையில் நேற்று காதப்பாறை, மண்மங்கலம், வெங்கமேடு பகுதிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்தனர். இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவர் கூறுகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வீடு தேடிச்சென்று டோக்கன் வழங்கி வருகிறோம். இன்றும்(புதன்கிழமை) டோக்கன் வினியோகம் செய்யப்படும். நாளை(வியாழக்கிழமை) முதல் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Next Story