இதுவரை இல்லாத புதிய உச்சம் கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 54 பேர் பலி புதிதாக 2,062 பேருக்கு வைரஸ் தொற்று


இதுவரை இல்லாத புதிய உச்சம் கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 54 பேர் பலி புதிதாக 2,062 பேருக்கு வைரஸ் தொற்று
x
தினத்தந்தி 9 July 2020 4:30 AM IST (Updated: 8 July 2020 10:26 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 2,062 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மராட்டியம், புதுடெல்லி, தமிழகத்திற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் தற்போது நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதலில் 200, 300 பேர் அளவில் இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது தினமும் 1,000 பேரை தாண்டி உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக கர்நாடகத்தில் 2,062 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர்.

இதில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் மட்டும் நேற்று ஒரேநாளில் 1,148 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாநிலத்தில் பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனா வைரசால் கர்நாடகத்தில் 420 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக மாநிலத்தில் 54 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

474 பேர் பலி

இதனால் மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அதாவது இதுவரை மாநிலத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 28,877 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 474 ஆகவும் பதிவாகி இருக்கிறது.

இதில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் மட்டும் இதுவரை வைரஸ் தொற்றால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 12,509 ஆக பதிவாகி இருக்கிறது.

பலியானவர்களின் எண்ணிக்கையும் 168 ஆக உயர்ந்து இருக்கிறது. கர்நாடகத்தில் தினமும் பாதிப்பு எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மாநில அரசும், மக்களும் பீதி அடைந்துள்ளனர்.

Next Story