கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நகராட்சி ஆணையாளருடன் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. ஆலோசனை


கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நகராட்சி ஆணையாளருடன் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. ஆலோசனை
x
தினத்தந்தி 9 July 2020 4:00 AM IST (Updated: 9 July 2020 12:24 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து கடையநல்லூர் எம்.எல்.ஏ. முகமது அபுபக்கர் ஆலோசனை நடத்தினார்.

செங்கோட்டை, 

செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் கண்ணன் உடன், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து கடையநல்லூர் எம்.எல்.ஏ. முகமது அபுபக்கர் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் அவர் கூறுகையில், “செங்கோட்டை நகராட்சியில் தொற்று பரவாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நகராட்சியின் வருவாயை அதிகரிக்க தமிழக அரசு பொது நிதியில் வணிக வளாகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நகராட்சி அலுவலகம் அருகே உள்ள முத்துசாமி பூங்காவை பராமரித்து புனரமைப்பு செய்ய வேண்டும். எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பம்ப் ஹவுஸ் ரோட்டில் ரேஷன்கடை அமைக்கவும், காலங்கரையில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி கட்டிடம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்“ என்றார். 

நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர தி.மு.க செயலாளர் ரஹீம், முஸ்லிம் லீக் மண்டல இளைஞரணி அமைப்பாளர் கடாபி, நகர செயலாளர் அரபிக் பஷீர், நகர தலைவர் சன்சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story