தண்ணீர் திறக்கக் கோரி கன்னடியன் கால்வாயில் குடியேறும் போராட்டம் நடத்திய விவசாயிகள்


தண்ணீர் திறக்கக் கோரி கன்னடியன் கால்வாயில் குடியேறும் போராட்டம் நடத்திய விவசாயிகள்
x
தினத்தந்தி 8 July 2020 10:30 PM GMT (Updated: 8 July 2020 7:19 PM GMT)

சேரன்மாதேவியில் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி கால்வாயில் விவசாயிகள் குடியேறும் போராட்டம் நடத்தினர்.

சேரன்மாதேவி, 

சேரன்மாதேவியில் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி கால்வாயில் விவசாயிகள் குடியேறும் போராட்டம் நடத்தினர்.

குடியேறும் போராட்டம்

சேரன்மாதேவி தாலுகாவின் பிரதான கால்வாய் கன்னடியன் கால்வாய் ஆகும். இதன் மூலம் கல்லிடைகுறிச்சி முதல் கோபாலசமுத்திரம் வரை சுமார் 13,000 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாக பயன் பெறுகின்றன. இங்கு ஆண்டுதோறும் ஜூன் 1-ந் தேதி கார் சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இன்று வரை கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் கால்வாயில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

இதில் அணையில் இருந்து கன்னடியன் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி கோஷமிட்டனர். தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் மாரியப்பன், ஜெயகணேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வந்தனர்.

பேச்சுவார்த்தை

அவர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு வார காலத்திற்குள் தண்ணீர் திறக்க ஆவண செய்கிறோம் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

போராட்டத்தில் கன்னடியன் கால்வாய் பாசன விவசாய சங்க தலைவர் பாபநாசம், செயலாளர் கண்ணப்ப நயினார், பொருளாளர் ரத்தினம், தி.மு.க ஒன்றிய செயலாளர் முத்து பாண்டி என்ற பிரபு, நகர செயலாளர் மனிஷா செல்வராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், கூட்டுறவு பண்டக சாலை தலைவர் ஐயப்பன், மாவட்ட வழக்கறிஞர் அணி செல்வகுமார், காங்கிரஸ் முருகன் ரவிச்சந்தர், அ.தி.மு.க மாரிச்செல்வம், ம.தி.மு.க குட்டி பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாதவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கமால் பாட்சா மற்றும் கன்னடியன் கால்வாய் பாசன விவசாய சங்கத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story