தூத்துக்குடியில் பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு கொரோனா பாதித்தவர்களுக்கு முறையான வசதி செய்து கொடுக்க கோரிக்கை


தூத்துக்குடியில் பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு கொரோனா பாதித்தவர்களுக்கு முறையான வசதி செய்து கொடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 July 2020 4:00 AM IST (Updated: 9 July 2020 1:32 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கொரோனா பாதித்தவர்களுக்கு முறையான வசதி செய்து கொடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கொரோனா பாதித்தவர்களுக்கு முறையான வசதி செய்து கொடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா வைரஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் தொற்று உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏற்கனவே 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து திரேஸ்புரம் நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். ஏற்கனவே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உரிய உணவு, படுக்கை வசதி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு முறையாக வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

அதே போன்று சிலர் மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு விசைப்படகு மீனவர்களை கடலுக்கு செல்ல அனுமதித்து இருப்பது போன்று எங்களையும் கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் பொதுமக்கள் திரேஸ்புரத்தில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு வெளியில் வந்தனர். திரேஸ்புரம் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் செல்வக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story