வெளிநாடுகளில் இருந்து 3 சிறப்பு விமானங்களில் 371 பேர் சென்னை வந்தனர்


வெளிநாடுகளில் இருந்து 3 சிறப்பு விமானங்களில் 371 பேர் சென்னை வந்தனர்
x
தினத்தந்தி 8 July 2020 10:15 PM GMT (Updated: 8 July 2020 8:16 PM GMT)

பல்வேறு நாடுகளில் சிக்கிய இந்தியர்கள் மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானத்தில் அழைத்து வரப்படுகின்றனர்.

ஆலந்தூர்,

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கிய இந்தியர்கள் மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானத்தில் அழைத்து வரப்படுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிலையில் கென்யாவில் சிக்கி தவித்த 3 பெண்கள் உள்பட 27 பேர்களுடனும், அபுதாபியில் இருந்து 3 குழந்தைகள், 11 பெண்கள் உள்பட 167 பேருடனும், குவைத்தில் சிக்கிய 3 பெண்கள் உள்பட 177 பேருடனும் 3 சிறப்பு விமானங்கள் சென்னை வந்தன.

இதில் வந்த 371 பேருக்கு சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை முடிந்ததும் அங்கேயே தமிழக பொது சுகாதார துறை சார்பில் கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அனைவரும் அரசு பஸ்களில் சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் ஓட்டல்களில் தனிமைப்படுத்துதல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Next Story