திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து ஒருவர் கைது


திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து ஒருவர் கைது
x
தினத்தந்தி 9 July 2020 4:24 AM IST (Updated: 9 July 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த குப்பம்மாள் சித்திரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 33). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த குப்பம்மாள் சித்திரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 33). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் குமார் தன் வீட்டில் இருந்தபோது, குடிபோதையில் அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் (51) என்பவர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தில் குமாரின் வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் காயம் அடைந்த குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து அவரின் மனைவி சசிகலா திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜெயச்சந்திரனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story