திருநின்றவூரில் டிராவல்ஸ் நிறுவன அதிபர் வெட்டி படுகொலை
திருநின்றவூரில் டிராவல்ஸ் நிறுவன அதிபரை 5 பேர் கொண்ட கும்பல் விரட்டி சென்று அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.
ஆவடி,
ஆவடி அடுத்த திருநின்றவூர், செல்வராஜ் நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 36). இவர் அப்பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி சங்கீதா (32). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது சங்கீதா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் மகேந்திரன் நேற்று மாலை தனது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு சாலையில் நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல், திடீரென மகேந்திரனை அரிவாளுடன் துரத்த ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் அங்குள்ள ஒரு மளிகை கடையில் மகேந்திரன் ஓடி தஞ்சம் அடைந்தார். ஆனால் அந்த கும்பல் கடைக்குள் நுழைந்து மகேந்திரனின் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருநின்றவூர் போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மகேந்திரனை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தமிழ், மற்றும் சாலமோன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக மகேந்திரனை படுகொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. எனினும் கொலையாளிகளை பிடித்த பின்னர் தான் கொலைக்கான முழு விவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Related Tags :
Next Story