போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்: சேலம் சரக டி.ஐ.ஜி. தலைமையில் நடந்தது


போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்: சேலம் சரக டி.ஐ.ஜி. தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 9 July 2020 4:48 AM IST (Updated: 9 July 2020 4:48 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் எருமியாம்பட்டியில் சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.

அரூர்,

தர்மபுரி மாவட்டத்தில் காவல் பணியின்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து தர்மபுரி மற்றும் அரூர் கோட்டத்தில் பணிபுரியும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் எருமியாம்பட்டியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் தமிழ்மணி, சூர்யா(பயிற்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார் கலந்து கொண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை கைது செய்யும்போதும், போலீஸ் காவலில் வைக்கும்போதும் பின்பற்ற வேண்டிய சட்டவிதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் கைதிகளை போலீஸ் நிலையத்தில் வைத்திருக்கும்போது உரிய விதிகளை சரியாக பின்பற்றுவதை போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா ஊரடங்கு தொடர்பாக மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான பாதுகாப்பு பணிகளிலும், வாகன சோதனைகளிலும் ஈடுபடும் போலீசார் கட்டாயம் முககவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். பொது இடங்களில் காவல் பணியின்போது கிருமிநாசினியை பயன்படுத்துவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி காவல் பணியை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story