பகண்டை கூட்டுரோடு, சங்கராபுரம் காவல் நிலையங்களில் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆய்வு


பகண்டை கூட்டுரோடு, சங்கராபுரம் காவல் நிலையங்களில் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆய்வு
x
தினத்தந்தி 9 July 2020 12:10 AM GMT (Updated: 9 July 2020 12:10 AM GMT)

ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்ரோடு போலீஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்ரோடு போலீஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கிருந்த போலீசாரிடம், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபி, வீரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

இதேபோல் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் சங்கராபுரம் போலீஸ் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அங்கிருந்த போலீசாரிடம், கொரோனா தொற்று பரவாமல் இருக்க தினந்தோறும் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும், அனைவரும் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்து பணிபுரிய வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story