நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வினியோகம்
அரசு ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் ‘ஆர்செனிக் ஆல்பம்’ மாத்திரைகளை வினியோகிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட மையம் மற்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் சார்பில் அரசு ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் ‘ஆர்செனிக் ஆல்பம்’ மாத்திரைகளை வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க மாவட்ட தலைவர் இளவரசன் தலைமை தாங்கினார். வட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அன்பழகன், நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ், நகராட்சி நகர் நல அலுவலர் பிரபு உள்ளிட்டோர் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன் கலந்து கொண்டு பேசினார். இயற்கை மருத்துவர் டாக்டர் பூங்குன்றன், ஓமியோபதி டாக்டர் சங்கீதா, நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவகுமார், வட்ட நிர்வாகிகள் குணசேகரன், பாபுராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் ராஜூ, வட்ட நிர்வாகிகள் தமிழ்வாணன், மேகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story