திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு செவிலியர் பலி புதிதாக 21 பேருக்கு தொற்று; 108 பேர் ‘டிஸ்சார்ஜ்’


திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு செவிலியர் பலி   புதிதாக 21 பேருக்கு தொற்று; 108 பேர் ‘டிஸ்சார்ஜ்’
x
தினத்தந்தி 9 July 2020 10:44 AM IST (Updated: 9 July 2020 10:44 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சுகாதார செவிலியர் பலியானார். புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதி ஆனது. 108 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் இதுவரை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 23 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பெற்ற மணப்பாறை அருகே உள்ள வளநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த 54 வயது கிராம செவிலியர் நேற்று காலை கொரோனாவுக்கு பலியானார். அவர், கடந்த மாதம் 25-ந் தேதி சளி மற்றும் சர்க்கரை நோய் காரணமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. தொடர்ந்து தனிவார்டில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.

புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதி

அதே வேளையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,080 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 108 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். 432 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

Next Story