அரியலூரில் ராணுவ வீரர் உள்பட 12 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் 3 பேர் பாதிப்பு
அரியலூரில் ராணுவ வீரர் உள்பட 12 பேரும், பெரம்பலூரில் 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 475 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், 459 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி இருந்தனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டது. பக்ரைன் நாட்டில் இருந்து திரும்பி வந்த மணியங்குறிச்சியை சேர்ந்த 31 வயது ஆண், தஞ்சையில் இருந்து திரும்பி வந்த விளாங்குடியை சேர்ந்த 45 வயது பெண், சென்னையில் இருந்து திரும்பி வந்த சென்னிவானத்தை சேர்ந்த 38 வயது ஆண், அரியலூரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகள் ஆகிய 3 பேர் மற்றும் அரசு ஊழியர்களான சென்னி வானத்தை சேர்ந்த 45 வயது பெண், மருவத்தூரை சேர்ந்த 38 வயது பெண், அகரத்தை சேர்ந்த 30 வயது பெண் ஆகிய 3 பேர், இந்திய எல்லை பகுதியான லடாக் பகுதியில் இருந்து திரும்பி வந்த வெற்றியூரை சேர்ந்த ராணுவ வீரர் மற்றும் வெற்றியூரை சேர்ந்த தாய்-மகள் ஆகிய 2 பேர் என மொத்தம் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
அவர்களில் 9 பேர் அரியலூர் அரசு மருத்துவ மனையிலும், 3 பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் அரியலூர் மாவட்டத்தில் 473 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளது.
108 ஆம்புலன்சு டிரைவர்கள்
இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 170 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், ஒருவர் உயிரிழந்தார். 155 பேர் சிகிச்சை பெற்று மருத்துவ மனைகளில் இருந்து வீடு திரும்பி இருந்தனர். இந்நிலை யில் சென்னை சென்று திரும்பி வந்த பெரம்பலூர் மாவட்ட 108 ஆம்புலன்சு டிரைவர் களான வேலூரை சேர்ந்த 29 வயது ஆண், திருச்சி மாவட்டம் கீரம்பூரை சேர்ந்த 31 வயது ஆண் மற்றும் வேப்பூரை சேர்ந்த 26 வயது ஆண் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 108 ஆம்புலன்சு டிரைவர்கள் திருச்சி அரசு மருத்துவமனை யிலும், மற்றொருவர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story