நெல்லை கலெக்டர் அலுவலகத்தை சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்கள் முற்றுகை
நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் காமராஜ், பொதுச் செயலாளர் ஜோதி, பொருளாளர் மணி மற்றும் நிர்வாகிகள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் கொடிகளுடன் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கிருந்த மனு பெட்டியில் தங்களது கோரிக்கை மனுவை போட்டனர்.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த போக்குவரத்து கழக பஸ்களை இயக்குவது மற்றும் இயக்கத்தை நிறுத்துவது சம்பந்தமாக முடிவுகள் வெளியிடப்பட்டன. ஊரடங்கு தளர்வால் போக்குவரத்து நிர்வாகங்கள் அரசின் வழிகாட்டுதல்களையோ, அரசாணைகளையோ கடைபிடிக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றன.
தற்போது பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ள நிலையில் எந்தவித போக்குவரத்து வசதியும் இல்லாமல் தொழிலாளர்கள் பணிமனைக்கு வர வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதனை நோய் உள்ளவர்கள் பணிபுரிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்ட பிறகும், 55 வயதுக்கு மேற்பட்டவர்களும் பணிக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். ஊனமுற்றோரையும் பணிக்கு வர நிர்பந்திக்கின்றனர். தொழிலாளர்கள் குடும்பத்தில் நோய் தொற்று ஏற்பட்டிருந்தாலும் மற்றும் நோய் தொற்று காரணமாக தடை செய்யப்பட்ட பகுதிகளில் குடியிருக்கும் தொழிலாளர்களையும் பணிக்கு வருமாறு கூறுகின்றனர்.
கட்டாயப்படுத்தக்கூடாது
கடந்த 4 நாட்களில் மதுரை, ஈரோடு, வேலூர் மண்டலங்களில் 15 தொழில்நுட்ப பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட பணிமனைகளிலும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், அரசு உத்தரவு, வழிகாட்டுதல்களை போக்குவரத்து கழக நிர்வாகம் கடைபிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
போக்குவரத்து இல்லாத நிலையில் தொழில்நுட்ப பணியாளர்களும், அலுவலக பணியாளர்களையும் அலுவலகத்துக்கு வர கட்டாயப்படுத்தக்கூடாது. பணிக்கு வரமுடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழ்ப்புலிகள்
இதே போல் தமிழ்ப்புலிகள் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story