கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுரண்டையில் 3 நாட்கள் கடையடைப்பு
சுரண்டையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் காமராஜர் காய்கனி மார்க்கெட்டில் வீ.கே.புதூர் தாசில்தார் (பொறுப்பு) மகாலட்சுமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சுரண்டை,
சுரண்டையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் காமராஜர் காய்கனி மார்க்கெட்டில் வீ.கே.புதூர் தாசில்தார் (பொறுப்பு) மகாலட்சுமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நாளை (சனிக்கிழமை) முதல் 13-ந் தேதி வரை 3 நாட்களும் முழு கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. 14-ந் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும். ஓட்டல்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் (பார்சல் மட்டுமே வழங்கப்படும்) என சுரண்டை வியாபாரிகள் சங்கம், காமராஜர் வணிக வளாகம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய சங்கங்களின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, பேரூராட்சி நிர்வாக அதிகாரி அரசப்பன், துணை தாசில்தார் சிவனு பெருமாள், வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், கிராம நிர்வாக அலுவலர் பாலு உள்பட வியாபாரிகள் சங்கம், காய்கனி மார்க்கெட் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story