வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 39 பேருக்கு கொரோனா
கொரோனா ஊரடங்கால் 20 நாடுகளில் சிக்கி தவித்த 26 ஆயிரத்து 704 பேர் சிறப்பு விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஆலந்தூர்,
கொரோனா ஊரடங்கால் 20 நாடுகளில் சிக்கி தவித்த 26 ஆயிரத்து 704 பேர் சிறப்பு விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஏற்கனவே 476 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
முகாமில் தங்கி இருந்தவர்களில் குவைத்தில் இருந்து வந்த 17 பேருக்கும், ரஷியாவில் இருந்து வந்த 7 பேருக்கும், சவுதி அரேபியாவில் இருந்து வந்த 6 பேருக்கும், கிர்கிஸ்தான் நாட்டில் இருந்து வந்த 3 பேருக்கும், ஓமன் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து வந்த தலா 2 பேருக்கும், பக்ரைன், கத்தார் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என மேலும் 39 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்துவந்த 73 ஆயிரத்து 502 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்தது.
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் நேற்று 18 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் 55 பேருக்கும், பெருங்குடி மண்டலத்தில் 56 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 14 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

Related Tags :
Next Story