கிராம நிர்வாக அலுவலர் மனைவி தற்கொலை
கடையம் அருகே உள்ள குமரேச சீனிவாசநகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பாப்பாங்குளத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
கடையம்,
கடையம் அருகே உள்ள குமரேச சீனிவாசநகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பாப்பாங்குளத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி செல்வகுமாரி (வயது 46).
இவர் ரத்த அழுத்தம் சம்பந்தமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தனது மகளின் வாழ்க்கையை பற்றி அடிக்கடி நினைத்து கணவரிடம் சொல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு தனது கணவரிடம் பேசிவிட்டு தூங்க சென்றார். அதிகாலையில் தனது மனைவியை தேடிய மாரியப்பன், குளியல் அறையில் தனது மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்ததும் கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். செல்வகுமாரி உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் காஜா மைதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story