கொரோனாவை வென்று பணிக்கு திரும்பினார் தொழிலாளர் ஆணையர் நந்தகோபாலுக்கு உற்சாக வரவேற்பு


கொரோனாவை வென்று பணிக்கு திரும்பினார் தொழிலாளர் ஆணையர் நந்தகோபாலுக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 10 July 2020 4:30 AM IST (Updated: 10 July 2020 1:20 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் தொழிலாளர் ஆணையர் ஆர்.நந்தகோபால், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார்.

சென்னை,

தமிழக அரசின் தொழிலாளர் ஆணையர் ஆர்.நந்தகோபால், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். பின்னர், அதில் இருந்து விடுபட்ட நிலையில், வீட்டிலேயே சிறிது நாட்கள் ஓய்வில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று அவர் பணிக்கு திரும்பினார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணைய அலுவலகத்திற்கு அவர் நேற்று வந்தபோது தொழிலாளர் ஆணையரக அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வரவேற்றனர். அதன்பின்னர், தனது அறைக்கு சென்ற அவர் வழக்கமான பணிகளை மேற்கொண்டார்.

Next Story