மராட்டியத்தில் மேலும் 6,875 பேருக்கு கொரோனா கல்யாண்-டோம்பிவிலியில் புதிய உச்சம்
மராட்டியத்தில் புதிதாக 6 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கல்யாண்- டோம்பிவிலியில் புதிய உச்சம் ஏற்பட்டு உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் புதிதாக 6 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கல்யாண்- டோம்பிவிலியில் புதிய உச்சம் ஏற்பட்டு உள்ளது.
6,875 பேருக்கு பாதிப்பு
மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் காட்டு தீயாக பரவி வருகிறது. நேற்று மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 875 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 259 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 4 ஆயிரத்து 67 பேர் ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டனர்.
மாநிலத்தில் மேலும் 219 பேர் பலியானார்கள். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 667 ஆக அதிகரித்து உள்ளது.
மும்பை
மும்பையில் நேற்று புதிதாக 1,268 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 89 ஆயிரத்து 124 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும் 68 பேர் பலியானதன் மூலம் மும்பையில் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 132 ஆக அதிகரித்து உள்ளது.
கல்யாண்-டோம்பிவிலி
இதேபோல கல்யாண்- டோம்பிவிலி மாநகராட்சியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று அங்கு புதிதாக 743 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 12 ஆயிரத்து 498 பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பையையொட்டி உள்ள பகுதிகளில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அடைப்புக்குறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-
தானே புறநகர்- 7,350 (பலி 139), தானே மாநகராட்சி - 13,381 (516), நவிமும்ைப மாநகராட்சி- 9,889 (258), உல்லாஸ்நகர் மாநகராட்சி- 3,563 (60), பிவண்டி மாநகராட்சி- 2,769 (149), பால்கர்- 1,672 (20), ராய்காட் - 3,469 (56), பன்வெல் மாநகராட்சி - 3,683 (86).
Related Tags :
Next Story