மூதாட்டியிடம் ரூ.56 லட்சம் அபேஸ் பேஸ்புக் நண்பர், பெண்ணுக்கு வலைவீச்சு


மூதாட்டியிடம் ரூ.56 லட்சம் அபேஸ் பேஸ்புக் நண்பர், பெண்ணுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 July 2020 4:45 AM IST (Updated: 10 July 2020 4:35 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியிடம் ரூ.56 லட்சம் அபேஸ் செய்த பேஸ்புக் நண்பர் மற்றும் தொடர்புடைய பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

வசாய்,

மூதாட்டியிடம் ரூ.56 லட்சம் அபேஸ் செய்த பேஸ்புக் நண்பர் மற்றும் தொடர்புடைய பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பேஸ்புக்கில் அறிமுகம்

பால்கர் மாவட்டம் வசாயை சேர்ந்த 69 வயது மூதாட்டி ஒருவருக்கு பேஸ்புக் மூலம் ஸ்காட்லாண்டு நாட்டை சேர்ந்தவர் என்று கூறிக்கொண்ட லியோ ஜோவோ என்பவரின் தொடர்பு கிடைத்தது. அவர் பிரிட்டிஷ் ஏர்லைன்சில் விமானியாக பணியாற்றி வருவதாக தெரிவித்து கொண்டார். இதனை நம்பிய மூதாட்டி அவரிடம் அடிக்கடி பேசி வந்தார்.

நாளடைவில் லியோ ஜோவா தொழில் தொடங்க இந்தியாவில் 2 ஏக்கர் நிலம் வாங்க விரும்புவதாகவும், இதற்காக நான் உங்களது பெயருக்கு பணம் அனுப்பி வைப்பதாகவும் முதாட்டியிடம் தெரிவித்தார். சில நாள் கழித்து ஜோஸ்லா என்ற பெயரில் பெண் ஒருவர் மூதாட்டியை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

ரூ.56 லட்சம் மோசடி

அப்போது, பார்சல் ஒன்று விமான நிலையத்தில் வந்து இருப்பதாகவும், அந்த பார்சலில் நிறைய பணம் இருப்பதாகவும், இதற்காக சுங்கவரி செலுத்தினால் பார்சலை உங்கள் முகவரிக்கு அனுப்பி விடுவதாகவும் தெரிவித்தார். இதனை நம்பிய மூதாட்டி பெண் தெரிவித்த வங்கிக்கணக்கில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.56 லட்சத்து 36 ஆயிரம் செலுத்தினார். ஆனால் பார்சல் அவரது வீட்டிற்கு வரவில்லை.

மேலும் அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணமோசடி செய்த பேஸ்புக் நண்பர் மற்றும் பெண்ணை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story