மாவட்டத்தில் ஒரேநாளில் போலீசார்-டாக்டர்கள் உள்பட 55 பேருக்கு கொரோனா பாதிப்பு - புதிய உச்சத்தால் பொதுமக்கள் பீதி
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 போலீசார் 3 டாக்டர்கள் உள்பட 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. கொரோனா பாதிப்பில் புதிய உச்சத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 3 பெண் போலீசார், மற்றும் உளவுப்பிரிவு போலீஸ் ஏட்டு ஆகியோருக்கு சளி,காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை நேற்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போது 4 பேருக்கும் கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று கொரோனா தொற்று உறுதியானது.
தர்மபுரி ராஜாதோப்பு பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர், பெங்களூருவில் இருந்து தர்மபுரி திரும்பிய 47 வயது ஓட்டல் தொழிலாளி, வெங்கட்டனூரை சேர்ந்த 26 வயது பெண், செட்டிக்கரையை சேர்ந்த 38 வயது மற்றும் 40 வயது கொண்ட 2 கட்டிட மேஸ்திரிகள், நாயக்கன்கொட்டாயை சேர்ந்த 35 வயது பெண், நூலஅள்ளி பகுதியை சேர்ந்த 19 வயது பெண், இலக்கியம்பட்டியை சேர்ந்த 27 வயது பெண், கிர்கிஸ்தான் நாட்டில் இருந்து வந்த தர்மபுரி பிடமனேரியை சேர்ந்த 22 வயது எம்.பி.பி.எஸ். மாணவி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பெங்களூருவில் இருந்து பி.துரிஞ்சிப்பட்டி வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 50 வயது, 24 வயது 32 வயது கொண்ட 3 பெண்கள், 5 வயது சிறுமி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதேபோல் தர்மபுரி நெடுமாறன் நகரை சேர்ந்த 62 வயது முதியவர், 38 வயது ஆண், அரிகரநாதர் கோவில் தெருவை சேர்ந்த 52 வயது ஆண், திருவண்ணாமலைக்கு சென்று வந்த 30 வயது அங்கன்வாடி பணியாளர், அப்புநகரை சேர்ந்த 27 வயது ஆண், ராஜஸ்தானில் இருந்து வந்த தர்மபுரி ஆறுமுகஆசாரி தெருவை சேர்ந்த 24 வயது, 25 வயது பெண்கள், 24 வயது ஆண், 4 வயது சிறுவன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதேபோல் கர்நாடகாவில் இருந்து வந்த தீர்த்தமலையை சேர்ந்த 29 வயது ஆண், பெல்ரம்பட்டியை சேர்ந்த 51 வயது அங்கன்வாடி கண்காணிப்பாளர், மல்லுப்பட்டியை சேர்ந்த 52 வயது பெண், 59 வயது ஆண், 25 வயது வாலிபர், ஜிட்டாண்டஅள்ளியை சேர்ந்த 57 வயது ரேஷன்கடை பணியாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அனுமந்தபுரம் வந்த 23 வயது வாலிபர், சென்னையில் இருந்து எலுமிச்சனஅள்ளி வந்த 35 வயது ஆண், சென்னையில் இருந்து மொரப்பூர் வந்த 33 வயது பெண் மற்றும் 34 வயது ஆண், மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து வந்த ஒடசல்பட்டியை சேர்ந்த 35 வயது டிரைவர், தடங்கத்தை சேர்ந்த 53 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதேபோல் சென்னையில் இருந்து நல்லம்பள்ளி வந்த 24 வயது கொண்ட 3 டாக்டர்கள், சென்னையில் இருந்து நல்லம்பள்ளி வந்த 47 வயது டிரைவர், மும்பையில் இருந்து நார்த்தம்பட்டி வந்த 33 வயது பாதுகாப்பு படை வீரர், ஐதராபாத்தில் இருந்து அன்னசாகரம் வந்த 21 வயது ஆண், பஞ்சப்பள்ளி வந்த 48 வயது மற்றும் 24 வயது தொழிலாளிகள், ராமகொண்டஅள்ளியை சேர்ந்த 24 வயது தொழிலாளி, செங்கல்பட்டில் இருந்து தொப்பூர் வந்த 32 வயது ஆண், காஞ்சீபுரம் சென்று வந்த மூங்கில்மடுவை சேர்ந்த 30 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
கர்நாடகாவில் இருந்து அரகாசனஅள்ளி வந்த 32 வயது லாரி டிரைவர், பெங்களூரில் இருந்து வந்த கூத்தப்பாடியை சேர்ந்த 42 வயது பெண், செம்மணஅள்ளியை சேர்ந்த 23 வயது பெண், தர்மபுரி அதியமான் தெருவை சேர்ந்த 25 வயது பெண், செங்கல்பட்டில் இருந்து வந்த நல்லம்பள்ளியை சேர்ந்த 37 வயது ஆண், நல்லம்பள்ளியை சேர்ந்த 23 வயது ஆண், ஐதராபாத்தில் இருந்து தர்மபுரி வந்த 28 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் 53 பேர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். 2 பேர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். கொரோனா பாதிப்பில் புதிய உச்சத்தால் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story