திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்தில் நேற்று மேல்நல்லாத்தூர், புதுமாவிலங்கை, செஞ்சி, எம்.ஜி.ஆர்.நகர், கடம்பத்தூர், பாப்பரம்பாக்கம், போளிவாக்கம், விடையூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 17 பேர், சென்னை தி.நகரில் உள்ள தபால் நிலையத்தில் பணியாற்றி வரும் ஊழியரான சோழவரம் ஒன்றியம், ஆரணி கலங்கி தெருவைச் சேர்ந்த 32 வயது வாலிபர், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஆரணி ஜி.என்.செட்டித் தெருவில் வசித்து வரும் 50 வயது ஆண், ஆரணி கட்டு தெருவில் 36 வயது வாலிபர் உள்ளிட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இவர்களுடன் சேர்த்து திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,877 ஆனது. இவர்களில் 3,591 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 2,169 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் 117 பேர் பலியாகி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள திருக்கச்சூர் பஜனை கோவில் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, கூடுவாஞ்சேரி கற்பகம்மாள் நகரில் வசிக்கும் 9 வயது சிறுவன், 31 வயது இளம்பெண், மண்ணிவாக்கம் புதுநகர் பகுதியை சேர்ந்த 67 வயது மூதாட்டி, 35 வயது இளம்பெண், ஊரப்பாக்கம் கங்கா தெரு, ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த 63 வயது மூதாட்டி, வண்டலூர் ஊராட்சி, ஒட்டேரி நேரு தெருவை சேர்ந்த 25 வயது இளைஞர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,386 ஆக உயர்ந்தது. இவர்களில் 4,199 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 34 வயது, 35 வயது வாலிபர்கள் உள்பட 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியைச் சேர்ந்த 24 வயது வாலிபர், அதே பகுதியை சேர்ந்த 50 வயது ஆண், மணிமங்கலம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த 26 வாலிபர் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.
இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,038 ஆனது. இவர்களில் 1,216 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1,782 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 40 பேர் பலியானார்கள்.

Related Tags :
Next Story