திருவள்ளூர் அருகே சாலை அமைப்பதில் தகராறு; ஊராட்சிமன்ற தலைவியின் கணவர் கைது போலீஸ் நிலையம் முற்றுகை
திருவள்ளூர் அருகே சாலை அமைப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் அருகே சாலை அமைப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கொண்டஞ்சேரி கண்டிகையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 52 ). இவர் கடம்பத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளராக உள்ளார். இவரது மனைவி சரஸ்வதி. இவர் கடம்பத்தூர் ஒன்றிய குழு துணைத்தலைவராக உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ், சத்தரை மேட்டுகாலனி பகுதியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தில் சாலை அமைக்க அரசு அதிகாரிகள் மூலம் டெண்டர் வழங்கப்பட்டு பணி உத்தரவு பெற்றார்.
நேற்று முன்தினம் ரமேஷ், சத்தரை மேட்டுக்காலனியில் பொக்லைன் எந்திரம் மூலம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சத்தரை ஊராட்சி மன்ற தலைவியின் கணவரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான வெங்கடேசன் (47) என்னுடைய மனைவி ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கும்போது, நீங்கள் இங்கு வந்து ஏன் பணி செய்கிறீர்கள் என்று தட்டி கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
மேலும் அவர் அங்கு இருந்தவர்களை பணி செய்ய விடாமல் மிரட்டியுள்ளார். இது குறித்து ரமேஷ், மப்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஊராட்சி மன்ற தலைவியின் கணவரான வெங்கடேசனை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்தரை கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மப்பேடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் வெங்கடேசனை ஜாமீனில் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் மப்பேடு போலீஸ் நிலையத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story