தஞ்சை மாநகராட்சி அதிகாரி, 3 டாக்டர்கள் உள்பட 32 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 576 ஆக உயர்வு


தஞ்சை மாநகராட்சி அதிகாரி, 3 டாக்டர்கள் உள்பட 32 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 576 ஆக உயர்வு
x
தினத்தந்தி 10 July 2020 5:42 AM IST (Updated: 10 July 2020 5:42 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாநகராட்சி அதிகாரி, 3 டாக்டர்கள் உள்பட மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்று மேலும் 32 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் தஞ்சையை சேர்ந்த 20 பேரும், பட்டுக்கோட்டையை சேர்ந்த 4 பேரும், ஒரத்தநாட்டை சேர்ந்த 3 பேரும், திருவையாறு, பாபநாசம் பகுதியை சேர்ந்த தலா 2 பேரும், அம்மாப்பேட்டையை சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

இதில் தஞ்சை மாநகராட்சி மாநகர் நல அலுவலர், திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர், தஞ்சையை சேர்ந்த 2 பெண் டாக்டர்கள் ஆகியோரும் அடங்குவர்.

இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற்ற 13 பேர் குணம் அடைந்து நேற்று வீடு திரும்பினர்.

தற்போது தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 83 பேரும், வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 59 பேரும் என 142 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story