தரக்குறைவாக திட்டிய போலீசை கண்டித்து சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மாநகராட்சி ஊழியரை திட்டிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோழிங்கநல்லூர்,
சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15-வது மண்டலத்தில் பொக்லைன் எந்திர டிரைவராக ஆறுமுகம் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் ஈஞ்சம்பாக்கத்தில் பணியை முடித்து விட்டு அவர் மண்டல அலுவலகத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அக்கரை பகுதியில் பணியில் இருந்த நீலாங்கரை போலீஸ் நிலைய 2-ம் நிலை போலீஸ் விக்ரமன், பொக்லைன் எந்திர டிரைவர் ஆறுமுகத்திடம் அந்த பகுதியில் உள்ள மரம் ஒன்றை அகற்றும்படி கூறினார். அதற்கு அவர், நன்றாக உள்ள மரத்தை அகற்றினால் பிரச்சினை வரும். மண்டல அலுவலத்தில் மனு கொடுத்து அதிகாரிகள் உத்தரவிட்டால் அகற்றலாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் போலீஸ்காரர் விக்ரமன், ஆறுமுகத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சல் அடைந்த ஆறுமுகம், போலீஸ்காரர் விக்ரமன் மீது நீலாங்கரை போலீசில் புகார் செய்தார். ஆனால் புகாரை அங்கிருந்த போலீசார் வாங்காமல் திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.
இதையடுத்து நேற்று சோழிங்கநல்லூர் மண்டல அலுவலக வளாகத்தில் பணிக்கு வந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், செங்கொடி சங்கம் சார்பில் ஆறுமுகத்துக்கு ஆதரவாக, தகாத வார்த்தைகளால் திட்டிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துரைப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் லோகநாதன், நீலாங்கரை உதவி கமிஷனர் விஸ்வேஸ்வரையா, இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், சரவணன், வீரக்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சோழிங்கநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த்ரமேஷ் மண்டல அலுவலத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும், போலீசாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட போலீசை பணியிடமாற்றம் செய்வதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story